ஹஸ்பண்டுனா ‘இப்படி’ இருக்கணும்... முகமெல்லாம் ‘சிரிப்பாய்’ மேகன்... என்ன செஞ்சாருனு நீங்களே பாருங்க... வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Feb 06, 2020 04:05 PM

இளவரசர் ஹாரி மனைவி மேகனின் தலைமுடியை சரிசெய்துவிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sweet Video Of Prince Harry Fixing Meghans Hair Goes Viral

அரச வாழ்க்கையில் இருக்கும்போதே ஹாரியும், அவருடைய மனைவியும் பொது இடங்களில் கைகோர்த்து நடப்பதும், அன்பை வெளிக்காட்டும்படி நடந்து கொள்வதும் வழக்கம். ஆனால் அப்போது அவர்கள் அரச வாழ்க்கை விதிமுறைகளை மீறி பொது இடங்களில் இதுபோல இருக்கிறார்கள் என்பது ஒரு பிரச்சனையாக கூறப்பட்டது. இந்நிலையில் அரச வாழ்க்கையைத் துறந்து கனடாவிற்குச் சென்றுள்ள ஹாரி மற்றும் மேகனின் அன்பை வெளிக்காட்டும் விதமாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மிச்சேல் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஹாரியும் மேகனும் கலந்து கொண்ட சில பொது நிகழ்ச்சிகளில், ஹாரி மனைவியின் தலைமுடியை சரிசெய்துவிடும் சில காட்சிகள் வருகின்றன. அதில் மனைவியின் முடி செயினில் மாட்டிக்கொள்ளும் போது, காற்றில் பறக்கும்போது என ஒவ்வொரு தருணங்களிலும் உடன் இருக்கும் ஹாரி அதை அன்புடன் சரிசெய்துவிட, மேகனும் முகமெல்லாம் சிரிப்புடன் கணவரைப் பார்க்கிறார். இந்த வீடியோவை இதுவரை 27.6 மில்லியன் மக்கள் பார்த்துள்ள நிலையில், ஹாரியை மிகச் சிறந்த கணவர் என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

 

Tags : #PRINCEHARRY #MEGHAN #VIRAL #VIDEO #HUSBAND #ENGLAND