‘தகாத உறவால் கணவருக்கு நேர்ந்த பயங்கரம்’.. ‘மகனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 07, 2019 12:15 PM

கரூரில் காருக்குள் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவருடைய மனைவியும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Karur Man Murdered By His Son And Wife Over Affair Issue

கரூர் பரமத்தி அருகே சாலையோரம் எரிந்த நிலையில் நின்றுகொண்டிருந்த காரில் இருந்து எரிந்துபோன ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் காருக்குச் சொந்தக்காரரான ரங்கசாமி என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் இதுகுறித்து ரங்கசாமியின் மனைவி கவிதா மற்றும் மகன் அஸ்வின் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகவே பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த ரங்கசாமிக்கு திருமணத்தை மீறி வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இந்த விஷயம் கவிதா மற்றும் அஸ்வினுக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கவிதா அவரைக் கண்டித்தும், அவர் அதைக் கேட்காமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில் குடித்துவிட்டு வந்த ரங்கசாமி கவிதாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின் தந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின் இருவரும் ரங்கசாமியின் உடலைக் காரில் ஏற்றிக் கொண்டு வெளியே சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது கார் சாலையோரம் இருந்த பள்ளம் ஒன்றில் சிக்க, இங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து காரின்மீது டீசல் ஊற்றி எரித்துவிட்டு இருவரும் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அதன்பிறகு போலீஸார் நடத்திய விசாரணையில் வேறு வழியின்றி அவர்கள் கொலைச் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். தகாத உறவால் மகனுடன் சேர்ந்து மனைவியே கணவரை கொலை செய்து காரில் வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KARUR #MURDER #HUSBAND #WIFE #SON #AFFAIR #CAR #FIRE