‘மனைவி உடனான தவறான உறவைக் கண்டித்த கணவருக்கு’.. ‘நண்பர்களால் நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 28, 2019 08:11 PM

திண்டுக்கல்லில் மனைவியின் திருமணத்தை மீறிய தவறான உறவைக் கண்டித்த கணவர் தன் நண்பர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Dindigul Man killed by friends and wife over extramarital affair

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி சிவபாலாஜி (38). இவருக்கு சண்முகப்பிரியா (28) எனும் மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சண்முகப்பிரியாவிற்கும், சிவபாலாஜியின் நண்பரான பாண்டி என்பவருக்கும் தவறான உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் சிவபாலாஜிக்கு தெரியவர அவர்கள் இருவரையும் அழைத்துக் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இதுதொடர்பாக பாண்டியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சிவபாலாஜி அவருடன் பேச மறுத்து சாலையில் தனியே சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது சிவபாலாஜியைப் பின்தொடர்ந்து வந்த பாண்டி தன்னுடைய காரால் அவரை மோதித் தள்ளியுள்ளார். இதில் சிவபாலாஜி நிலைதடுமாறி கீழே விழ, பாண்டி நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்துகொண்டு அவருடைய தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார்.

இதை விபத்து போல அவர்கள் சித்தரிக்க முயன்றபோதும் போலீஸ் விசாரணையில் சிவபாலாஜியின் செல்ஃபோனை ஆராய்ந்து பார்த்ததில் உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து பாண்டி, சண்முகப்பிரியா உட்பட 5 பேரைக் கைது செய்துள்ள போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #DINDIGUL #HUSBAND #WIFE #FRIEND #AFFAIR #MURDER #MARRIAGE #GANG #CAR #ACCIDENT