'நான் இருக்கும்போது இன்னொரு பொண்ணா?'... 'ஜாலியா படத்துக்கு போன கணவர்'...வச்சு செஞ்ச மனைவி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Nov 05, 2019 12:09 PM
கணவர் வேறொரு பெண்ணுடன் படத்துக்கு சென்றதை நோட்டமிட்டு, கையும் களவுமாக பிடித்து மனைவி தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காஜ்ரன்னாவில் பிரபல திரையரங்கம் உள்ளது. அதன் முன்பு இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள். அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. அதில் தர்ம அடி வாங்கிய நபர் தனது மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் திரையரங்கத்திற்கு வந்துள்ளார்.
சில நாட்களாக தனது கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மனைவி அவரை உன்னிப்பாக கவனித்து வந்தார். இதனால் கணவர் எங்கு செல்கிறார் என்று அவரை பின் தொடர்ந்து சென்ற அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண்ணின் கணவர் வேறொரு பெண்ணுடன் படத்திற்கு செல்ல இருவரையும் கையும், களவுமாக பிடித்த அந்த பெண் தியேட்டர் வாசலில் வைத்து கடுமையாக தாக்கினர்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை முற்ற அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டாகிறாள். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
வேறு ஒரு பெண்ணுடன் சினிமாவுக்கு சென்ற கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி pic.twitter.com/zmUOrU8c5i
— Lingam S Arunachalam (@as_lingam) November 4, 2019
