'எவ்வளவோ எச்சரித்தும் கேட்காத கணவர்'... '5 வயது மகளுடன், இளம் தாய்’... ‘எடுத்த விபரீத முடிவு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 30, 2019 03:59 PM

கணவர் தொடர்ந்து குடித்து வந்ததால் மனமுடைந்த இளம் பெண் ஒருவர், தனது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

the woman and 5 year old daughter committed suicide

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன். இவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு ஒன்று, அதேப் பகுதியில்  பாரத் பெட்ரோலியம் எதிரே உள்ளது. இந்த கிணற்றில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் மற்றும் 5 வயது சிறுமியின் உடல்கள் மிதந்தன. இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சடலங்கள் அழுகிய நிலையில் இருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இந்நிலையில், உயிரிழந்தவர்கள் கெடார் பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவரது மனைவி ஆனந்தி மற்றும் அவர்களது 5 வயது மகள் சுமித்ரா என விசாரணையில் தெரியவந்துள்ளது. தினந்தோறும் குடித்துவிட்டு வீடு வரும் கணவரை, மனைவி ஆனந்தி பலமுறை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும் அவர் திருந்தாததால், மனமுடைந்த மனைவி ஆனந்தி, கடந்த 3 நாட்களுக்கு முன், மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது. இந்நிலையில், இருவரும் சடலங்களாக கைப்பற்றப்பட்டுள்ளனர். ஆனால், மனைவி காணாமல் போனது குறித்து, கணவர் காத்தவராயன் புகார் ஏதும் தெரிவிக்காதது, போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதனால் போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SUICIDE #WIFE #DAUGHTER #HUSBAND #FAMILY #ISSUE