‘கூப்பிட்டு பார்த்தும் வரல’.. ‘பெட் ரூமில் கிடந்த 2 வயர், 5 அடி நீளக்கம்பி’.. பதறிப்போன மாமியார்..! கைதான இன்ஜினீயர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 07, 2019 01:32 PM

மனைவியை மின்சாரம் பாய்ச்சியை கொலை செய்ய முயன்ற இன்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Namakkal husband tried to kill his wife with electricity

நாமக்கல் மாவட்டம் அன்பு நகரை சேர்ந்தவர்கள் தங்கவேல்-வளர்மதி தம்பதியினர். இவர்களது மகள் ரூபிகா (30). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிவபிரகாஷம் என்ற கம்ப்யூட்டர் இன்ஜினீயருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனைவியிடம் சிவப்பிரகாஷம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தடுக்க வந்த மாமனார் தங்கவேலுவை சிவபிரகாஷம் கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் சிவபிரகாஷம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே ஜாமினில் வெளியே வந்த சிவபிரகாஷம் தாய் வீட்டில் இருந்த தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால் ரூபிகா வர மறுத்தாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரூபிகாவின் வீட்டின் அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து 2 வயர்களை 5 அடி நீளக்கம்பியுடன் இணைத்து படுக்கையறை வழியாக மனைவி ரூபிகாவை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் வயர் இருப்பதை பார்த்த ரூபிகாவின் தாய் வளர்மதி உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது நாமக்கல் பேருந்து நிலையத்தில் சிவபிரகாஷம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே விரைந்து சென்ற போலீசார் பேருந்து நிலையத்தில் இருந்த சிவபிரகாஷத்தை கைது செய்தனர்.

Tags : #CRIME #NAMAKKAL #HUSBAND #TAMILNADU #WIFE