‘டியூசன்’ முடிந்து திரும்பிய ‘சிறுவனுக்கு’ நேரந்த ‘விபரீதம்’... தாய் ‘கண்முன்னேயே’ அலறிய ‘பரிதாபம்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாபிட்புல் ரக நாய் ஒன்று விடாமல் கடித்ததில் சிறுவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் ஜலந்தரைச் சேர்ந்த லக்ஸ் உப்பால் என்ற 15 வயது சிறுவன் டியூசனுக்குச் சென்றுவிட்டு நேற்று மாலை சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது பிட்புல் ரக நாய் ஒன்று அவருடைய காலைப் பிடித்து கடிக்கத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவருடைய தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் கம்பு, கற்களால் தாக்கியும், தண்ணீரை ஊற்றியும் அந்த நாய் சிறுவனின் காலை விடாமல் கடித்துள்ளது.
சுமார் 15 நிமிடங்கள் சிறுவனை விடாமல் கடித்த நாய் பின்னரே அங்கிருந்து ஓடிச் சென்றுள்ளது. இதில் 2 கால்களிலும் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
