‘ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்’... ‘துடிதுடித்த கணவர்’... ‘கடைசியில் மகளையும் விட்டுவைக்காமல்’.... 'சேலம் அருகே நடந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 29, 2020 11:11 AM

சேலத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவன் தலையில் குழவிக் கல்லை போட்டு கொன்றுவிட்டு, மகளை பாலியல் தொல்லை செய்ய முயன்றதால், மகள் கொலை செய்துவிட்டதாக பெற்ற தாயே நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband Killed by his Wife Due to Extra Marital Affair

எடப்பாடி அருகே உள்ள ஒருவாப்பட்டி தென்பொதியான் வளவு பகுதியை சேர்ந்தவர் கரும்பு வெட்டும் தொழிலாளியான படவெட்டி (40). இவருக்கு நளா (37) என்கிற மனைவியும், பள்ளியில் படித்து வரும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை, படவெட்டி இறந்து கிடப்பதாக ஜலகண்டபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், இது குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தலையில் கல்லால் தாக்கப்பட்டு படவெட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.

கடந்த புதன்கிழமை இரவு பத்தரை மணி அளவில் கணவர் குடிபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டதாக நளா கூறியுள்ளார்.மேலும், 16 வயதான மூத்த மகளிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், தன்னை பாதுகாத்துக் கொள்ள மகள் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தந்தையின் தலையில் போட்டத்தில் அவர் உயிரிழந்துவிட்டாக நளா தெரிவித்துள்ளார். ஆனால் போலீசாருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பிளஸ் ஒன் படித்துவரும் மகளிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மாணவி முன்னுக்கு பின் முரணாக கூறினார்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது படவெட்டி கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதில், நளாவின் அக்கா மருமகன் ரங்கசாமிக்கும் (25), 37 வயதான நளாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை கணவர் கண்டித்ததால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு நளா சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சமரசத்திற்குப் பின்னர், படவெட்டி மனைவியுடம் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். ஆனால் ரங்கசாமியை சந்திக்க முடியாமல் தவித்த நளா, கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, நளாவும்,  ரங்கசாமியும் சேர்ந்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த படவெட்டி மீது அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தனர்.

அப்போது படவெட்டி துடிதுடித்துள்ளார். இந்த கொலை வழக்கில் இருந்து தப்பிக்க ரங்கசாமியும், நளாவும் திட்டம் தீட்டினர். இதற்காக நளாவின் மகளை மூளைச்சலவை செய்து, தனது தந்தையை கொலை செய்ததாக கூற வைத்துள்ளனர். நீ கொலை செய்ததாக கூறினால், கருணை மற்றும் தற்காப்பு அடிப்படையில் விடுதலை செய்து விடுவார்கள் எனக் கூறி, பெற்ற தாயே சிறுமியை மூளைசலவை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததும் அம்பலமானது. இதையடுத்து சிறுமியை விடுவித்த போலீசார், ரங்கசாமி மற்றும் நளாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.