'கதறி துடிச்சாங்க'... '85 வயது பாட்டிக்கு நடந்த சொல்லெண்ணா கொடூரம்'...குலைநடுங்க செய்யும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 27, 2020 04:11 PM

டெல்லியில் நடந்த வன்முறையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 85 வயது மூதாட்டிக்கு நடந்துள்ள சம்பவம் நாட்டையே அதிரச் செய்துள்ளது.

Delhi violence : 85-year-old ladyTrapped As Mob Set Her Home On Fire

டெல்லியின் காம்ரி எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வருபவர் அக்பரி. நேற்று காலையில் இவரது வீட்டிற்கு வந்த வன்முறைக் கும்பல் அங்கு வன்முறை வெறி ஆட்டத்தை நடத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்பரியின் மகன் சயீத் சல்மானி பிரபல ஆங்கில ஊடகமான NDTVக்கு அளித்துள்ள பேட்டியில், '' காலை 11 மணி இருக்கும். அப்போது வீட்டில் பால் இல்லை என கூறினார்கள். இதனால் நான் பால் வாங்கக் கடைக்குச் சென்று விட்டேன்.இதையடுத்து நான் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது எனது மகன் அதிர்ச்சியில் ஓடி வந்தான்.

அப்போது அவன், வீட்டிற்கு 150 - 200 பேர் வந்தார்கள் என்றான். இதனால் பயந்து போன எனது 2 மகன்களும், 2 மகள்களும் வீட்டை உட்புறமாகப் பூட்டிக் கொண்டனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த வன்முறை கும்பல் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தியது. அந்த நேரத்தில் வீட்டின் மேல் மாடியில் எனது தாயார் இருந்தார். அவர் அங்குச் சிக்கிக் கொண்டார். வீட்டை விட்டு வெளியே சென்றால் தங்களையும் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில், எனது பிள்ளைகளும் வெளியே செல்லவில்லை. காப்பாற்றுங்கள் எனக் கதறி உள்ளார்கள்.

கொஞ்சமும் இரக்கமற்ற வன்முறை கும்பல், வீட்டின் தரை தளத்திலிருந்த எனது துணிக் கடையை முதலில் தீயிட்டுக் கொளுத்தியது. அதன்பின்னர் வீட்டின் மற்ற மாடிகளுக்கு தீ வைத்தார்கள். இந்த கோரச் சம்பவத்தில் சிக்கிய எனது தயார் பரிதாபமாக இறந்து போனார். அவரின் உடல் 10 மணிநேரமாக எரிந்த வீட்டிற்குள்தான் கிடந்தது.

தீயணைப்பு படையினர் இரவு 9.30-க்கு வந்துதான் உடலை மீட்டுத் தந்தனர். எனது தயார் இறக்கும் போது உதவிக்காக நிச்சயம் போராடி இருப்பார். ஆவர் எவ்வளவு கொடுமையை அனுபவித்து இருப்பார் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை'' என கனத்த இதயத்துடன் கூறியுள்ளார். தலைநகரில் கடந்த ஞாயிறு முதற்கொண்டு நடந்து வரும் கலவரத்தில் 34 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

Tags : #MURDER #KILLED #DELHI WOMAN #TRAPPED #DELHI VIOLENCE #FIRE #CITIZENSHIP LAW #AKBARI