தகராறில் ‘மனமுடைந்து’ மனைவி எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘காப்பாற்ற’ சென்ற கணவருக்கு... ‘கடைசியில்’ நடந்த ‘சோகம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 27, 2020 01:08 PM

திருவண்ணாமலை அருகே தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயற்சித்த கணவரும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Wife Sets Herself On Fire Husband Dies While Trying To Save Her

திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதி மணிகண்டன் - தீபா. மணிகண்டன் மதுவுக்கு அடிமையானதால் கணவன் - மனைவி இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இதனால் மனமுடைந்திருந்த தீபா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது தீபாவை காப்பாற்ற முயற்சித்த மணிகண்டன் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீபாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #THIRUVANNAMALAI #HUSBAND #WIFE #FIRE