‘குடிபோதையில் தந்தை கொடுத்த பாலியல் தொல்லை’.. ‘உயிர்ப் போராட்டத்தில் கிரைண்டர் கல்லை எடுத்து’.. மகள் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 28, 2020 08:09 AM

சேலம் மாவட்டம் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மகளே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

daughter kills her father after he tried to abuse her

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரத்தில் உள்ளது ஆவடத்தூர். இவ்வூரைச் சேர்ந்த கூலி தொழிலாளிதான் படவெட்டி. இந்த படவெட்டிக்கு நளா என்கிற மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில்தான் படவெட்டி, நள்ளிரவில் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு  கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பரபரப்பான இந்த சம்பவத்தை அடுத்து, இது குறித்து தகவல் அறிந்த ஜலகண்டபுரம் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்க தொடங்கினர். இந்த விசாரணையில்தான் படவெட்டி தனது மகளுக்கு மது போதையில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் அவரது மகளே கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து தாய், மகள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SALEM #DAUGHTER #FATHER