'கணவன் தற்கொலை செய்து கொண்டதாக... புகார் அளித்த மனைவி!'... விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!... திக் திக் நிமிடங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 28, 2020 05:15 PM

புதுவண்ணாரப்பேட்டையில் கணவரின் கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

wife kills drunkard husband brutally as he tortured his children

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 46). எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த தணிகைவேல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு குழந்தைகளை அடித்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக, கணவன்-மனைவி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கணவர் தணிகைவேல் தூக்கில் தொங்கி செய்து தற்கொலை செய்து கொண்டதாக ரேகா போலீஸில் புகார் செய்துள்ளார்.

ஆனால், மருத்துவ பரிசோதனையில் தணிகைவேல் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதுவண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் சரவணன், ரேகாவிடம் விசாரணை நடத்தியதில் ரேகா தன் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது அம்பலமானது.

இது குறித்து ரேகா கூறும்போது, “சம்பவத்தன்று குடித்து விட்டு தகராறு செய்த தணிகைவேல் குழந்தையை அடித்ததால் எனக்கு கோபம் வந்தது. ஆத்திரத்தில் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்தேன். இதில் அவர் இறந்து விட்டதால் உடலை தூக்கில் தொங்க விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் கூறினேன்” என்றார்.

இதையடுத்து ரேகாவை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Tags : #CRIME #HUSBAND #WIFE #DRUNKARD