‘என் சாவுக்கு இவங்கதான் காரணம்’.. கொய்யாப்பழம் பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 26, 2020 12:35 PM

கொய்யப்பழம் பறிக்கச் சென்ற சிறுவனை செருப்பால் அடித்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vellore school student commits suicide at kattur school complex

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் தங்கராஜ் (18). இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கொய்யாப்பழம் பறிக்க சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த சிறுமி தங்கராஜிடம் கொய்யாப்பழம் கேட்டுள்ளார். அப்போது அங்கே வந்த சிறுமியின் தந்தை கருணாகரன், தனது மகளிடம் காதலை தெரிவிக்க தங்கராஜ் வந்திருப்பதாக எண்ணி செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை தங்கராஜ் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரும் தங்கராஜைதான் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தங்கராஜ் தனது மரணத்துக்கு காரணம் கருணாகரன் மற்றும் அவரது மகள் என எழுதி வைத்துவிட்டு காட்டூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தங்கராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சிறுவன் தற்கொலைக்கு காரணம் கொய்யாப்பழம் பிரச்சனையா? இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.