'போன் பண்ணினா எடுக்க மாட்டியா...?' 'சரமாரியாக வெட்டிக்கொண்டு இருந்தவரிடம் அரிவாளை பிடுங்கி...' கள்ளக்காதலினால் நடந்த பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வியாசர்பாடியில் போன் எடுக்கவில்லை என்று காதலியை வெட்டியபோது, கணவன் ஓடி வந்து அரிவாளை பிடுங்கி காதலனையே வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடி அருகேயுள்ள கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (25). மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவரது மனைவி அபிதா (23). மாரிமுத்துவின் நண்பர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் (25). இந்நிலையில், ஜான்சன் அடிக்கடி மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்து சென்றபோது, அபிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இதனை மாரிமுத்துவின் பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று மதியம் ஜான்சன், செல்போனில் அபிதாவை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அபிதா போனை எடுக்காததால் கோபமடைந்த ஜான்சன் நன்றாக மது அருந்திவிட்டு மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்து போதையில் அபிதாவிடம், “ஏன் எனது போனை எடுக்கவில்லை” என்று கூறி தகராறில் ஈடுபட்டார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அபிதாவை சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அபிதா மயங்கி கீழே விழுந்தார். அபிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மாரிமுத்து ஓடிவந்து ஜான்சனிடமிருந்த அரிவாளை பிடுங்கி ஜான்சனை சரமாரியாக வெட்டினார். இதில் ஜான்சனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அபிதா மற்றும் ஜான்சனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்குப்பின் மாரிமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
