VIDEO: ‘காசிமேடு அருகே பயங்கரம்’.. அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை.. பரபரக்க வைத்த சிசிடிவி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காசிமேடு அருகே மர்ம நபர்களால் ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை காசிமெடு பகுதியை சேர்ந்தவர் திவாகரன். இவரை கடந்த 2 தினங்களுக்கு முன்பு மர்மகும்பல் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமாரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக லோகேஷ், சிவக்குமார் உள்ளிட்ட 6 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்போது திவாகரன் படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
