'இவ்வளவு கொடூரமா சிதைச்சு இருக்காங்க'...'ஐயோ எங்க இதயமே நின்னு போச்சு'... கதறிய டாக்டர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 28, 2020 11:12 AM

டெல்லி வன்முறையின்போது கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலைப் பார்த்து மருத்துவர்களே உறைந்து நின்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கொலையைப் பார்த்தது இல்லை என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்கள்.

Autopsy Report : IB officer brutally stabbed to death

வடகிழக்கு டெல்லியில் கட்டுக்கடங்காமல் சென்ற வன்முறைச் சம்பவத்தில் தலைமைக் காவலர், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்ளிட்ட 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றவண்ணம் உள்ளனர். இந்நிலையில் மத்திய உளவுத் துறை அதிகாரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உளவுத் துறையில் உதவியாளராக இருந்த  அன்கிட் சர்மாவின் உடல் சாக்கடை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது. இதையடுத்து பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார்கள்.  அன்கிட் சர்மாவின் உடலில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கொடூர கொலையைப் பார்த்தது இல்லை என மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்கள். அன்கிட் சர்மாவின் உடலில் இருக்கும் காயங்களைப் பார்க்கும்போது, வன்முறைக் கும்பல் நீண்ட நேரம் அவரை சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Tags : #MURDER #KILLED #INTELLIGENCE BUREAU OPERATIVE #ANKIT SHARMA #AUTOPSY REPORT