‘திருமணமான’ 12 நாட்களில் ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘புதுப்பெண்’... ‘உறைந்துபோய்’ நின்ற கணவர்... சென்னையில் நடந்த ‘சோகம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 28, 2020 11:56 AM

சென்னையில் முன்னாள் காதலன் மிரட்டியதால் திருமணமான 12 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Newly Wed Woman Commits Suicide Over Threats From ExLover

சென்னையை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் வசித்து வரும் முத்து என்பவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் கடந்த 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முத்து வெளியே சென்றிருந்த நேரத்தில் சரஸ்வதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய முத்து மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், திருமணத்திற்கு முன்பு சரஸ்வதி வேறு ஒருவரை காதலித்து வந்ததும், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடப்போவதாக அந்த இளைஞர் மிரட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #CHENNAI #WOMAN #MARRIAGE #LOVER #HUSBAND