‘சுடுதண்ணீர் வைத்து தர மறுப்பு’... ‘மனைவிக்கு 75 வயது கணவரால் நிகழ்ந்த பயங்கரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 27, 2020 10:26 PM

சங்கரன்கோவில் அருகே சுடுதண்ணீர் வைத்து தர மறுத்த 2-வது மனைவியை தூங்கி கொண்டிருக்கும்போது, 75 வயது முதியவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman murdered by Husband due to Family Issue in Tenkasi

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பந்தப்புளி வடக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (75) மரம் வெட்டும் தொழில் செய்த வருகிறார். இவரது முதல் மனைவி ஆவுடையம்மாள் பிரிந்து சென்று அதே ஊரில் ஆடு மேய்த்து பிழைத்து வருகிறார். இதையடுத்து சீதாலட்சுமி (57) என்பவரை இரண்டாவதாக பொன்னுசாமி திருமணம் செய்து கடந்த மூன்றரை ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில், உடல்நலம் குன்றிய பொன்னுசாமி, தனக்கு பணிவிடை செய்யுமாறு கூறி வந்துள்ளார்.

ஆனால் சீதாலட்சுமியோ தனக்கு சொத்து எழுதித் தருமாறு கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர். இதற்கிடையில், சுடுதண்ணீர் வைத்து தருமாறு மனைவியிடம் பொன்னுசாமி கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் மறுக்கவே, ஆத்திரத்தில் இருந்த பொன்னுசாமி தூங்கிக்  கொண்டிருந்த மனைவியை விறகு வெட்டும் கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சீதாலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீதாலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொன்னுச்சாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MURDER #HUSBAND AND WIFE