'ராணுவ' வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட 'ஹுபேய்' நகரம்... மகளை காப்பாற்ற 'போராடிய தாய்'... கல் மனதையும் 'உருக வைக்கும்' கதை
முகப்பு > செய்திகள் > உலகம்'கொரோனா' வைரஸ் பாதிப்பால், சீனாவின் ஹூபய் மாகாணம் ராணுவ வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மகளை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு தாய் போராடியது, கல்மனதையும் உருக வைப்பதாக அமைந்தது.

சீனாவில், ஹூபய் மாகாணம், கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஹுபய் மாகாணத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 50 வயதாகும் லியூ யூஜின் என்ற பெண், தன், 26 வயது மகள் ஹூ பிங்குக்கு, புற்று நோய்க்கான கீமோ தெரபி சிகிச்சைக்காக அருகில் உள்ள ஜியூஜியாங் நகருக்கு செல்ல அனுமதி கேட்டிருந்தார். இதற்கு ராணுவ வீரர்கள் அனுமதி மறுத்தனர். இருப்பினும் மனம் தளராத அந்த தாய், தன்னிடம் இருந்த ஆதாரங்களைக் காட்டி சிகிச்சைக்கு செல்ல அனுமதிக்கும்படி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இதனைக் கேட்டு மனமிறங்கிய ராணுவ வீரர்கள், ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து, தாயையும், மகளையும் மாகாண எல்லையை கடக்க அனுமதித்தனர்.
