'மனைவியின் அவசர முடிவால்’... ‘கதறித் துடித்த கணவர்’... ‘2 பெண் குழந்தைகளுடன்’... 'ஒரே நாளில் நிலைகுலைந்துப் போன குடும்பம்'... 'திகைப் பூட்டிய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 04, 2020 07:33 PM

வாசல் தெளித்து கோலமிடுவதில் ஏற்பட்ட சிறு பிரச்சனையின் காரணமாக பெண் ஒருவர் எடுத்த அவசர முடிவால் ஒரு குடும்பமே சின்னப்பின்னமாகி நிலைகுலைந்துப் போகியுள்ளது.

Husband and Wife Commits Suicide With their Female Children

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான வெங்கடேசன். இவர் பெங்களூருவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்ததால், இவரது மனைவி நிர்மலா, 2 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ, ஒரு வயது மகள் ரித்திகா ஸ்ரீ ஆகியோர் கொடைக்கல்லில் வெங்கடேஷின் தாய் - தந்தையுடன் வசித்து வந்தனர். நிர்மலாவுக்கும், மாமியார் வினிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தப் பிரச்னையால்,  வீட்டின் மாடி போர்ஷனில் மனைவி நிர்மலாவையும், தரைத்தளத்தில் தாயையும் குடி வைத்துள்ளார் வெங்கடேசன்.

இந்நிலையில்தான், வீட்டு வாசலில் கோலம் போடுவது தொடர்பாக மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலையில் முன்னாடியே எழுந்த மாமியார் வினிதா, வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுள்ளார். அடுத்ததாக எழுந்து வந்த நிர்மலா, மாமியார் போட்ட கோலத்தின் மீது தண்ணீர் தெளித்து மீண்டும் கோலம்  போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால், ஆத்திரமடைந்த நிர்மலா, வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலை போலீசார்  சோழிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து, பெங்களூருவில் இருந்து வெங்கடேசன் ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த வெங்கடேசன் தனது பெற்றோர் உள்ளிட்ட எவரிடமும் ஏதும் பேசாமல், தனது இரு குழந்தைகளுடன்  கார் ஒன்றில் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், மனைவியின் உடலை பெறுவதற்காக, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் காத்திருந்த வெங்கடேசன் கதறி அழுததுடன், அப்போது கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மனைவி இறந்த துக்கத்தில் இருந்த அவர், போலீசார் தன்னைக் கைதுசெய்துவிட்டால் குழந்தைகள் அநாதையாகிவிடுமோ என்று அச்சப்பட்டு நண்பர்களிடம் கூறியிருக்கிறார். திடீரென இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, வாலாஜாபேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த வெங்கடேசன், குழந்தைகளுடன் சென்னை-பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராணிப்பேட்டை போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு, மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மாமியார், மருமகளுக்கு இடையே ஏற்பட்ட சிறு பிரச்சினையால், ஒரு குடும்பமே சின்னபின்னமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #VELLORE #RANIPET #HUSBANDANDWIFE #CHILDREN #TRAIN