‘நெரிசலில் சிக்கி உயிரிழந்த 14 பள்ளிக் குழந்தைகள்’.. ‘40 பேர் படுகாயம்’.. நெஞ்சை உருக்கும் பரிதாப சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 04, 2020 12:33 PM

கென்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

14 children dead 40 injured in kenya school stampede

கென்யாவின் மெக்கா நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் குறுகலான படிக்கட்டு வழியாக வெளியே வந்தபோது திடீரென நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் முட்டிக்கொண்டு ஓடியதில், குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் 14 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 40 க்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் எதனால் பீதியடைந்து ஓடத் தொடங்கினார்கள்? எதனால் நெரிசல் ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி இப்பகுதியில் நடப்பதாகவும், இந்த பள்ளிகளில் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதாகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : #SCHOOLSTUDENT #CHILDREN #KENYA