“முதல் நாள் இரவே வந்த ரகசியத் தகவல்!”.. “கடைசி நொடியில் மீட்கப்பட்ட 3 சிறுமிகள்!”.. அதிரவைத்த குடுகுடுப்பைக்காரர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 30, 2020 02:38 PM

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள, பைரவா காலனியில், 16, 17 வயதுடைய 3 சிறுமிகளுக்கு, இன்று காலையில் திருமணம் செய்துவைக்க முயன்ற குடுகுடுப்பைக் காரர்கள் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

child line officers stops 3 child marriage in vellore

இப்பகுதியில் குடும்பத்துடன் வாழும் குடுகுடுப்பைக்காரர்கள் நிறைய பேர் தங்களின் பெண் பிள்ளைகளுக்கு 13, 15 வயதை எட்டியவுடன் திருமணம் செய்துவைப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த 3 சிறுமிகளின் திருமண ஏற்பாடு குறித்த ரகசியத் தகவல் சைல்டு லைன் எண்ணான, 1098-க்கு நேற்றிரவு கிடைத்தது.

இந்த ரகசியம் கசிந்ததை அடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியின் உத்தரவின் பேரில், சைல்டு லைன் களப்பணியாளர்கள் மற்றும் வாலாஜா சமூக நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இணைந்து, காவல்துறை உதவியுடன் அம்மூர் நரசிங்கபுரத்திற்கு சென்று, சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உற்றாரிடமும் ஊர் பிரமுகர்களிடமும் பேசி, திருமனத்தை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் இதற்கு அந்த குடுகுடுப்பைக் காரர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையிலும், விடாமுயற்சியுடன் குழந்தைகளை மீட்ட அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழுவின் முன் ஆஜர்படுத்தி, வேலூர் அரசினர் பெண் குழந்தைகள் வரவேற்பு இல்லத்தில் தங்கவைத்துள்ளனர். இதுபற்றி பேசிய அதிகாரிகள், ‘இந்த சைல்டு லைன் ஹெல்ப்லைன் நம்பர் மூலம் பொதுமக்கள் போன் செய்து தகவல் தெரிவித்தால் இப்படி பல சிறார் திருமணங்களை தடுக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #CHILD MARRIAGE #VELLORE