‘தேசிய கீதம்’ இசைக்கப்பட்டபோது... அமெரிக்க அதிபர் ‘ட்ரம்ப்’ செய்த காரியத்தால் ‘சர்ச்சை’... ‘வைரலாகும்’ வீடியோ...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அதிபர் ட்ரம்ப் செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கீதம் பாடும்போது நேராக நிமிர்ந்து அசைவற்று நிற்பதுதான் ஒருவர் தேசிய கீதத்திற்கு செய்யும் மரியாதையாகக் கருதப்படுகிறது. அமெரிக்க மரபுப்படி, தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் நெஞ்சில் ஒரு கையை வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில், சூப்பர் பவுல் தேசிய கால்பந்து போட்டிக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அதிபர் ட்ரம்ப் மியூசிக் கண்டக்டர் போல கையையும், காலையும் ஆட்டி செய்கை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ரோட் தீவு காங்கிரஸ் உறுப்பினர் டேவிட் சிசிலைன் ட்விட்டரில், “நாட்டுப்பற்றுக்கே நான் தான் உதாரணம் என சொல்லிக்கொள்பவரின் செய்கை இதுதான். தேசிய கீதம் மேல் அவருக்கு மரியாதை இருப்பதாகத் தெரியவில்லை” எனக் கூறி, அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதிபர் ட்ரம்பின் இந்த செயல் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
For someone who claims to be such a patriot (and who attacked NFL players protesting police brutality), it sure doesn’t seem like @realDonaldTrump has a lot of respect for the National Anthem. pic.twitter.com/VrPBx1HXzo
— David Cicilline (@davidcicilline) February 3, 2020