‘நடுரோட்டில் கல்லூரி மாணவி’... ‘செய்த காரியத்தால் அதிர்ந்துபோன மக்கள்’... ‘கோவையில் நடந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 19, 2019 06:47 PM
கோவையில் நடுரோட்டில் கல்லூரி மாணவி ஒருவர், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சினேகா (19), கோவை பீளமேடு அருகே அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில், பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு அருகிலேயே உள்ள விடுதி ஒன்றில் தங்கிகொண்டு, அங்கிருந்து கல்லூரிக்கு சென்று படித்துவருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த அவர், விடுப்பு முடிந்து இன்று காலை தஞ்சையில் இருந்து கோவைக்கு திரும்பினார்.
பின்னர், அறைக்கு வெளியே சென்று, கோவை - அவினாசி ரோட்டுக்கு வந்த சினேகா, திடீரென தான் பாட்டிலில் வைத்து இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ குளித்தார். இதில் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம் போட்டார். நடுரோட்டில் மாணவி தீ பற்றி எரிவதை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சினேகாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
90 சதவிகித தீக்காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சினேகாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சினேகா, தான் படிக்கும் அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை, ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சினேகாவின் காதலை மாணவர் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த அவர், தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.