‘சகோதர - சகோதரி முறை என எதிர்த்த குடும்பத்தினர்’.. ‘காதலர்கள் செய்த அதிர்ச்சி காரியம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 19, 2019 01:06 PM

கடலூரில் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

Cuddalore Lovers Commit Suicide As Parents Oppose Marriage

கடலூர் மாவட்டம் அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரும், கோட்டலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவருக்கும் திருமணம் செய்துகொள்ளும் முறை இல்லை எனவும், சகோதர, சகோதரி முறை வருவதாவும் கூறி குடும்பத்தினர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுவாதியும், மதனும் நேற்று இரவு ராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக ரயில் எஞ்சின் ஓட்டுநர் தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #CUDDALORE #TRAIN #LOVER #SUICIDE #FAMILY #MARRIAGE