'எவ்ளோ தெரியுமா?'.. டாஸ்மாக்கில் உளறிய போதை ஆசாமி!.. வீடு தேடிவந்த மர்ம நபர்களால் சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 29, 2019 03:48 PM

தாம்பரத்தில் ஒரு பிரபலமான பார். அங்குதான் முருகன் என்பவர் உட்கார்ந்து தன் நண்பருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, தனக்கு ஒரு பை கிடைத்ததாகவும், அந்த பையில் 8 கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் அவர் உளறியுள்ளார். மேலும் அங்கு வந்த டாஸ்மாக் ஊழியருக்கு 2 ஆயிரம் ரூபாய் டிப்ஸையும் கொடுத்துள்ளார். 

Gang commits murder in a home after getting tipped off in Tasmac

இதனை பாரில் இருந்த இன்னொரு கும்பல் கவனித்துள்ளது. அந்த கும்பலில்தான் அருண்குமார் என்கிற வழக்கறிஞர் இருந்துள்ளார். இவர் பல்லாவரம் காவல் உதவி ஆய்வாளர் கன்னியப்பனின் மகன். இதனை அடுத்து, முருகனை பின் தொடர்ந்துச் சென்ற அருண்குமார் கும்பல், முருகனின் வீட்டை அடைய, வீட்டில் இருந்த முருகனின் மனைவி, தன் கணவர் வீட்டில் இல்லை என்றும், மாலை நேரம் வாருங்கள் என்றும் கூறியுள்ளார். இதை அறிந்த முருகன்,  தனக்கு ஆபத்து இருப்பதாகக் கருதி தனது  சொந்த ஊரான வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வாழைப்பந்தலுக்குச் சென்று தஞ்சம் அடைந்தார். ஆனாலும் அருண்குமார் விடாமல், முருகனின் மனைவி மற்றும் மகனை அவர்கள் வீடு தேடிச் சென்று அடித்து, கடத்தியதோடு முருகன் இருக்கும் இடத்தினையும் அவர்கள் மூலமாகவே அடைந்தனர்.

பின்னர் மொத்த குடும்பத்தையும், அருண்குமார் தனது நண்பருக்கு சொந்தமான கோவிலம்பாக்கம் பங்களாவிற்கு அழைத்துவந்து அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். அப்போது அடித்த அடியில் முருகன் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அப்போது, முருகனின் மனைவி, ‘என் கணவரையே அடித்துக் கொன்னுட்டீங்களே? இனியும் என்னையும் என் மகனையுமாவது விட்டுவிடுங்கள். பணம் இருக்கும் இடத்தை தேடி நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்’ என கெஞ்சி கூத்தாடி, தனது கணவரின் பிரேதத்தை பெற்றுக்கொண்டு வாழைப்பந்தலை சென்றடைந்தார்.

அப்போது முருகனின் இறப்பில் சந்தேகமடைந்த உறவினர், முருகனின் மனைவியை விசாரித்துள்ளனர். அவர் ஒரு கட்டத்தில் உண்மையைக் கூற, அதன் பின் முருகனின் உறவினர் அளித்த புகாரின் பேரில் ,போலீஸார் விசாரணை நடத்தி அருண்குமார், அவரது நண்பர்கள் உட்பட 11 பேரை கைது செய்தனர். எங்கோ ஏதோ பேசியதை கேட்டுவிட்டு யாரோ ஒருவரால் கூட ஒருவரது வாழ்க்கையில் இடர்பாடுகள் வரலாம் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

Tags : #HUSBANDANDWIFE #STRANGERS