'தீராத மன உளைச்சல்'... ‘மனைவி, மகள்களுடன்’... 'தந்தை எடுத்த விபரீத முடிவு'... 'கதி கலங்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 18, 2019 03:01 PM

விழுப்புரம் அருகே மனைவி மற்றும் இரு மகள்களுடன், குடும்பத் தலைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

man commits suicide with his wife and daughters due to debt

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே, குயிலாப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர்களது மூத்த மகள் கிருத்திகா (17), பிளஸ் டூ படித்து வந்தார். இளைய மகளான சமிக்ஷா (13), எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர்களை, செல்ஃபோனில் உறவினர்கள் தொடர்புகொள்ள முயற்சித்து பார்த்துள்ளனர். ஆனால் அது 3 நாட்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த உறவினர்கள், நேரில் வந்து அவர்களது வீட்டைப் பார்த்துள்ளனர்.

அப்போது கடந்த 3 நாட்களாகவே வீடு பூட்டி இருப்பதாக, அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் பதறிப்போன உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, சுந்தரமூர்த்தி தூக்கில் தொங்கியவாறும், அவரது மனைவி மற்றும் இரு மகள்கள், கீழே தரையில் அழுகிய நிலையில், சடலமாக கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஆரோவில் போலீசார், சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், சுந்தரமூர்த்தி நடத்தி வந்த தீபாவளிக்கான சீட்டு நிறுவனத்தில், நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில மாதங்களாவே சுந்தரமூர்த்தி மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தீபாவளி நெருங்கியநிலையில் கடன் தொல்லையால், குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது என்று மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த இந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DEBT #DEEPAVALI #DIWALI #CHITFUND #DAUGHTERS #HUSBANDANDWIFE