'நடத்தையில் சந்தேகம்'.. 'வெளிநாட்டில் இருந்து திரும்பிய பத்தே நாளில்'.. கணவரால் மனைவிக்கு நேர்ந்த அவலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 14, 2019 08:52 AM
வாணியம்பாடி அருகே உள்ள ஜாப்ரபாத் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான இர்ஷாத் கான். இவரது மனைவி ஷாபனா. இவருக்கு வயது 30.

இந்த தம்பதியருக்கு 5 மகள்கள், 1 மகன் உள்ள நிலையில், 2 வருடங்களுக்கு முன்புதான் இர்ஷாத், வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக அவர் தாயகம் திரும்பி வீட்டில் இருந்து வந்துள்ளார்.
ஆனால் வெளிநாட்டில் இருந்து திரும்பிய நாள் முதல், வீட்டில் குடித்துவிட்டு தனது மனைவி ஷாபனாவை சந்தேகப்பட்டு பேசியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வாதம் முற்றிப் போனது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இர்ஷாத்கான், மனைவி ஷாபனாவின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். குடல் சரிந்து வலியில் அலறித் துடித்த ஷாபனாவை அக்கம் பக்கத்தினர் வாணியம்பாடி மருத்துவமனையிலும், அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
எனினும் ஷாபனா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வாணியம்பாடி போலீஸார் இர்ஷாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
