‘உங்க பொண்ணு’... ‘பதறிப் போய் பார்த்த பெற்றோருக்கு’... ‘மருமகனால் காத்திருந்த அதிர்ச்சி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 01, 2019 03:29 PM

காதலியுடன் ஊர்சுற்ற, கடனில் வாங்கிய இருசக்கர வாகனத்திற்கு, பணம் வாங்கி வராததால், மனைவியை கணவன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

husband killed his wife and created such drama, finally arrested

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்த குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான மணிகண்டன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான தவமணி என்ற உறவுக்காரப் பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ள நிலையில், கடந்த வியாழனன்று இரவு கணவன், மனைவி இருவருக்குமிடையே  தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை காலை தவமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டநிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த தகவலை கேட்ட தவமணியின் பெற்றோர் கதறித் துடித்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் தவமணியின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முற்பட்டனர். அப்போது, தனது மனைவி மீது அதிக அன்பு வைத்திருப்பதாகக் கூறிய மணிகண்டன், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டாம் என்று காவல் துறையினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் மணிகண்டனை சமாதனப்படுத்திய போலீசார், தவமணியின் உடலை கைப்பற்றி வேனில் ஏற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த வாகனத்தில் ஏறாமல் மணிகண்டன் தலைமறைவகி விட்டதாக கூறப்படுகின்றது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், ஆம்புலன்ஸ் வண்டியில் வைத்தே, தவமணியின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது, தவமணியின் தலையில் அடிபட்ட ரத்த காயங்கள் இருந்தது.

அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், சடலத்தை கணவனிடம் தான் ஒப்படைக்க வேண்டும். எனவே அவரை அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். தனது மனைவியின் உடலை எதுவும் செய்யாமல் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில், ஊர் பஞ்சாயத்தார் உடன் அரசு மருத்துவமனைக்கு வந்தான் மணிகண்டன். அங்கு அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர்,  அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த மணிகண்டன், திருமணம் ஆன பின்பும், அதே ஊரை சேந்த வேறொரு பெண்ணை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. அவருடன் ஒன்றாக வெளியூர் சென்றுவர வசதியாக, நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்று பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த பெண்ணுடன் தனது கணவர் ஊர் சுற்றுவதை அறிந்த மனைவி தவமணி, கணவர் மணிகண்டனிடம் இது குறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடனில் வங்கிய பைக்கிற்கு, தவணை தொகை செலுத்த பணம் இல்லாததால், வரதட்சணையாக 20 ஆயிரம் ரூபாய் வாங்கி வரச்சொல்லி, மனைவி தவமணியை அடித்து துன்புறுத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றியதால், தவமணியை சுவற்றில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளான் மணிகண்டன் என்கின்றனர் காவல்துறையினர்.

கொலையை மறைக்க திட்டமிட்ட அவன், தவமணியின் சடலத்தை சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல தொங்கவிட்டுள்ளான். அப்போது அவனது மகன் விழித்துப்பார்த்து அலறியதால், அக்கம் பக்கத்தினர் திரண்டுள்ளனர். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கதறி அழுது, எல்லோரையும் நம்ப வைத்துள்ளான்.கடந்த சனிக்கிழமையன்று மணிகண்டனை கைது செய்த போலீசார், கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது எதுவும் அறியாத பிஞ்சு குழந்தைகள் இரண்டும் அநாதையாகி உள்ளன.

Tags : #MURDERED #HUSBANDANDWIFE