'எங்க பொண்ண நாங்க பாத்துக்குறோம்!'.. 'வரதட்சணை கொடுமை' செய்த குடும்பம்.. பெண் வீட்டாரின் 'நெகிழவைக்கும்' தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 28, 2019 02:04 PM

தென்காசி மாவட்டம் கடையாலுருட்டியைச் சேர்ந்த பெண், திருமணம் ஆகி 4 நான்கு வருடத்தில், தனது கணவர் ஜீவானந்தத்தின் வீட்டார், தன்னிடம் வரதட்சணைக் கேட்டதாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Wife asks husband to pay dowry harassment fine for hospital funds

2004-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இப்புகாரின் பேரில், அப்பெண்ணின் கணவர் ஜீவானந்தம், அப்பெண்ணின் மாமியார், மாமனார் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களில் 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஜீவானந்தத்தின் தரப்பு, இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததை அடுத்து 2010-ஆம் ஆண்டு அனைவரையும் நெல்லை விரைவு நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதை எதிர்த்து அப்பெண் உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்தார். அதன் பின் அப்பெண்ணுக்கு மனநலம் பிறழ்ந்தது. பின்னர் நெல்லை ஸ்னேகா மைண்ட் கேர் சென்டரில்தான் குணமாகியுள்ளார். இந்நிலையில் விசாரணைக்கு  வந்த இந்த மேல்முறையீட்டு வழக்கின் போது, சமரசம் செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது.

அப்போது அப்பெண்ணின் பெற்றோரோ, தங்கள் பெண்ணுக்கு 45 வயதாகிறது, இதுவரை பராமரித்த தாங்களே தங்கள் பெண்ணை இனியும் பராமரித்துக்கொள்ள முடியும் என்றும் ஆகையால், ஜீவானந்தத்தின் தரப்பினர் தருவதாக ஒப்புக்கொண்ட, 9 லட்சம் ரூபாய் பணத்தை, தங்கள் மகளுக்கு சிகிச்சை அளித்த, மேற்கொண்ட பலருக்கும் இலவச சிகிச்சை வழங்கிவருகிற நெல்லை ஸ்னேகா மைண்ட் கேர் சென்டருக்கு அளிக்குமாறு அப்பெண் கோரியுள்ளனர். இதனையடுத்து இம்முடிவில் இருதரப்பினரும் கையெழுத்திட, நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் நெல்லை ஸ்னேகா மைண்ட் கேர் சென்டருக்கு 9 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

மேலும் இவ்வழக்கில், கீழமை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட அபராதத் தொகையை ஜீவனாந்தம் தரப்பினர் திரும்பப் பெறக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : #THENKASI #HUSBANDANDWIFE #WEDDING