'பெட்ரூமில் பஞ்சுமெத்தைக்குள் சுருட்டி வைக்கப்பட்ட'.. 'மனைவியின் பிரேதம்'.. கணவர் செய்த.. நடுங்கவைக்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 25, 2019 12:52 PM

ஹரியானாவில், பிரிந்து சென்ற மனைவியைக் கொன்று படுக்கை மைத்தைக்குள் சுற்றி பெட் ரூமில் வைத்திருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது.

husband kills estranged wife and stuffed inside bed

இதுகுறித்து அப்பெண்ணின் சகோதரர் அக்‌ஷய் கொடுத்த புகாரின்படி,  அக்‌ஷயின் சகோதரி லலிதா, அவரது கணவர் ராஜ்வீருடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து சென்று ஹரியானாவின் குருகிராமில் கடந்த 5 வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரியானாவில் உள்ள பஹ்தூர்ஹாரில் இருக்கும் தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தனது மகனின் பிறந்த நாள் காரணமாக மாமியார் வீட்டுக்கு சென்று தனது மகனை ஆசையாக பார்க்கச் சென்ற லலிதாவை, அவரது கணவர் ராஜ்வீர் கொலை செய்ய திட்டமிட்டிருந்துள்ளார். இதற்கென தன் மகனையும், மகளையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அப்போதுதான், அங்கு வந்த லலிதாவை அடித்துக் கொன்று படுக்கையறையில் உள்ள மெத்தையில் சுற்றி வைத்துள்ளார் ராஜ்வீர்.

ஆனால் பிணவாடை வீசத் தொடங்கியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் அடிப்படையிலும், லலிதாவின் சகோதரர் அக்‌ஷய் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் போலீஸார் விரைந்து சென்று லலிதாவின் சடலத்தை கைப்பற்றி, ராஜ்வீரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #HARYANA #HUSBANDANDWIFE