'8 மாச கர்ப்பிணி பொண்ணு சார்'.. கதறிய பெற்றோர்.. 'சென்னை அருகே நடந்த சோகம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 17, 2019 09:47 PM

செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

fight with husband, Pregnant woman hanged herself in ceiling fan

மறைமலை நகரைச் சேர்ந்த இளவரசன் என்கிற நபர், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த நிலையில், அவருக்கும் அவரது கர்ப்பிணி மனைவியான கலைச்செல்விக்கும் இடையே சில நாட்களாக நிலவி வந்த தகராறு நேற்று முற்றியுள்ளது.

இந்த சூழலில், சமையல் செய்வது தொடர்பாக, கணவன் மனைவி இருவருக்குமிடையே உண்டான பிரச்சனை காரணமாக, 8 மாத கர்ப்பிணியான கலைச்செல்வி, மனவேதனை தாளாமல்,  படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் கலைச்செல்வியின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே, தங்கள் மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுவதாக, கலைச்செல்வியின் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர்.

Tags : #HUSBANDANDWIFE