‘பலமுறை கூறியும் கேட்காத கணவர்’... '2 குழந்தைகளுடன்'... 'இளம்பெண் எடுத்த விபரீத முடிவு'...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 25, 2019 06:04 PM

கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் அருந்தி தாய் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

young woman died after drink poison due to family issue

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அறுகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ராஜ். வாடகை வேன் ஓட்டுநரான, இவரது மனைவி மினி (27). இந்த தம்பதிக்கு ரிட்வர்ட் மனு (5), ரபிஷா மனு (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிரவீன் ராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி போதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது.

வழக்கம்போல், கடந்த 19-ம் தேதியும், குடிபோதையில் வந்த பிரவீன் ராஜூக்கும், அவரது மனைவிக்கும் பிரச்சனை வந்துள்ளது. மது குடிப்பதை நிறுத்துமாறு பலமுறை கூறியும், கணவர் கேட்காததால் மனம் உடைந்த மினி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷத்தை குடித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர், அவர்கள் 3 பேரையும் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், மினி சிகிச்சை பலனின்றி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்தார். குழந்தைகள் 2 பேருக்கும் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வடசேரி போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #WOMAN #DIED #HUSBANDANDWIFE