‘இரண்டரை மாத பெண் குழந்தைக்கு’... ‘சொந்த தந்தையால்’... ‘சென்னையில் நடந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 31, 2019 08:09 PM

சென்னையில், இரண்டரை மாத பெண் குழந்தையை, தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 and half month old baby murdered by her own father

கே.கே. நகர், டாக்டர் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவர், அதே பகுதியில், கணவரைப் பிரிந்து, இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த துர்கா என்ற பெண்ணை, கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்தான், பெண் குழந்தை பிறந்தது. தம்பதி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், அதனால் தினந்தோறும் குடித்து விட்டு சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை வழக்கம் போல் சண்டைவர, அப்போது பாலுக்காக அழுது கொண்டிருந்த பெண் குழந்தையை, எல்லப்பன் தாக்கியதாகத் தெரிகிறது. தலையில் அடி விழுந்ததில், பிஞ்சுக் குழந்தை நிலைகுலைந்து, அசைவற்று கிடந்துள்ளது. மூக்கிலிருந்தும் ரத்தம் வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து, குழந்தைக்கு வந்த ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்துவிட்டு, கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, கணவர் அடித்து குழந்தையை கொலை செய்ததை மறைக்க, குழந்தை கீழே விழுந்து மயக்கமானதாக துர்கா கூறியுள்ளார். ஆனால், தலைப்பகுதியில் சிவந்து இருந்ததால், மருத்துவருக்கு சந்தேகம் வர, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அங்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டதில், எல்லப்பன் அடித்ததில் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து எல்லப்பனை கைதுசெய்த போலீசார், தாய் துர்காவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CHENNAI #GIRL #DAUGHTER #HUSBANDANDWIFE