'நானெல்லாம் என் கணவரை இப்படி 6 மணி நேரம் நிக்க வெக்க மாட்டேன்'.. அனல் தெறிக்கும் கமண்ட்ஸ்.. வைரலாகும் கணவர்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Sep 10, 2019 05:14 PM

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவர் கோட்னி லீ ஜான்சன். அமெரிக்காவின் என்.ஜி.ஓவானா இவர், தான் பயணித்த விமானத்தில் நிகழந்த் ஒரு அற்புத காட்சியை படம் பிடித்து வலைப்பக்கத்தில் பகிர்ந்தார்.

Inspiring husband standing for his wife to sleep in flight

அதில் விமானத்தில் 6 மணி நேரம் நின்றுகொண்டு பயணித்த கணவரை, அவர் நிற்கும்போது புகைப்படம் எடுத்து, அதை செய்தி போலவே,  ‘6 மணி நேரம் நின்றுகொண்டு பயணித்த, நிம்மதியாக உறங்கிய மனைவி, இதுதான் காதல்’ என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் அந்த கணவரை பாராட்டினர்.

சிலர் அவர்களின் காதலை பாராட்ட செய்தனர். வெகுசிலர், 6 மணி நேரம் கணவரை நிற்க வைத்து அழகு பார்த்த மனைவி என அவரது மனைவியை திட்டவும் செய்தனர். அதுபோக, இன்னொரு பெண், ‘நானெல்லாம் என் கணவரை இத்தனை மணி நேரம் நிற்கவைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்க மாட்டேன்’ என்றும், இன்னொரு பெண்,  ‘இப்படி கணவரை நிற்கவைத்துவிட்டு தூங்கியதற்கு பதிலாக, அவரை அருகில் உட்கார வைத்துகொண்டு, அவர் மடியிலோ, அவரது தோளிலோ சாய்ந்து கொண்டு தூங்கியிருக்கலாமே?’ என்றெல்லாம் வாதம் பண்ணத் தொடங்கிவிட்டனர்.

இறுதியாக, அது அவர்களின் சொந்த விஷயம் என்று சிலரும், டைட்டானிக் நாயகியைக் காப்பாற்றிவிட்டு நாயகன் தண்ணீருக்குள்ளேயே ஒருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து செல்ஃபிஷ் என்று ஒருவரும் கமெண்ட் அடித்திருந்தனர். இத்தனை பரபரப்பை கிளப்பிய இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tags : #HUSBANDANDWIFE #FLIGHT #VIRAL