‘இறப்பிலும் இணைபிரியாத’... ‘மனமொத்த முதிய தம்பதி’... 'கண்ணீர் மல்க செய்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 24, 2019 06:46 PM

கணவர் இறந்த அதிர்ச்சியில், மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

old age couple who unites in death heartbreaking incident

நாகை மாவட்டம் நாகூர் பெருமாள் கீழவீதியை சேர்ந்தவர் காமராஜ் (70).  இவரது மனைவி மாலா (65). மிகவும் மனமொத்த தம்பதிகளான இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு டெய்லரான காமராஜ், இரவு பகலாக வேலைப் பார்த்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் முதியவரான காமராஜுக்கு, இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, வலியால் சுருண்டு விழுந்துள்ளார்.

இதனால் பதறிப்போன மனைவி மாலா மற்றும் அவரது மகன் சத்தியசீலனும் சேர்ந்து, ஆட்டோ மூலம், நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறிது நேரத்தில் கணவர் காமராஜ் மயங்கமடைந்து, மூச்சு பேச்சில்லாமல் கிடந்ததைக் கண்ட மனைவி மாலா அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் கதறி அழ ஆரம்பித்த அவரும், மயங்கி விழுந்துள்ளார். அதன்பிறகு இருவரையும், மகன் சத்தியசீலன் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்துள்ளார். கணவன்-மனைவி இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததை தெரிவித்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மகன் சத்தியசீலன் அங்கேயே கதறி துடித்தார். பெற்றோரைப் பார்த்து அநாதையாக விட்டுவிட்டீர்களே என்று கதறி அழுதது, பார்ப்பவர்களை கண்ணீர் மல்க செய்தது. பின்னர் தங்களது வீட்டிற்கு பெற்றோரின் உடல்களை கொண்டு சென்றார். சாவிலும் இணை பிரியாத முதிய தம்பதிகளின் அன்பை வியப்புடன் கூறிய உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Tags : #HUSBANDANDWIFE #ELDERLY #COUPLE