'பொறியியல் வேலைக்கு போகாம'.. 'விவசாயம் செய்ற கணவர்'.. மனைவி எடுத்த விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 17, 2019 12:46 PM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, கணவர் விவசாயம் செய்வது பிடிக்காமல் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

husband unwilling to work in Abroad, Wife commits suicide

சுந்தர் ராஜபுரத்தைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர் பெரிய மாடசாமி. இவரது மனைவி ஸ்டெல்லா மேரி. இந்தத் தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், பொறியியல் சார்ந்த வேலைக்குச் செல்லாமல், பெரிய மாடசாமி, தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

ஆனால் கணவர் பெரிய மாடசாமியை பொறியல் சார்ந்த வேலைக்காக வெளிநாட்டுக்குப் போகச் சொல்லி ஸ்டெல்லா மேரி வற்புறுத்தியதாகவும், இதற்கு மறுத்த பெரிய மாடசாமிக்கும், ஸ்டெல்லா மேரிக்கும் தகராறு முற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது ஸ்டெல்லா மேரி தற்கொலை செய்துகொண்டிருந்ததை பார்த்ததும் பெரிய மாடசாமி அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #HUSBANDANDWIFE