'சொன்னா கேக்க மாட்ட?'.. மனைவியுடன் கள்ள உறவு.. நண்பனுக்கு 'இப்படி ஒரு தண்டனை' கொடுத்த கணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 01, 2019 12:41 PM

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டியைச் சேர்ந்த கட்டட காண்ட்ராக்டர் பெரியசாமி. 43 வயதான பெரியசாமி முன்னாள் ராணுவ வீரர். திருமணமான இவரும் இவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், பெரியசாமி, தனது தந்தை ராமமூர்த்தியுடன் வசித்து வருகிறார்.

man killed his friend for having relationship with his w

இந்த சூழலில்தான், திருவண்ணாமலை மாவட்டம் தாமரை நகரைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும்(40) பெரியசாமிக்கும் இடையே தொழில் ரீதியான அறிமுகம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாயினர். இப்படி போய்க்கொண்டிருந்தபோது திடீரென ஒருநாள் பெரியசாமி கடத்தப்பட்டார்.

விசாரணையில், செந்தில்குமாரின் மனைவி சரண்யாவுக்கும்(32) அவரது நண்பர் பெரியசாமிக்கும் கள்ள உறவு இருந்ததை கண்கூட பார்த்துவிட்ட செந்தில்குமார், இதனை கண்டித்துள்ளார். ஆனாலும் பெரியசாமியும் சரண்யாவும் அடிக்கடி போச்சம்பள்ளிக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமாருக்கும் பெரியசாமிக்கும் இடையே தகராறு உண்டானது. அதன் பின்னர் தனது கூட்டாளிகளின் உதவியுடன் பெரியசாமியைக் கடத்திய செந்தில்குமார், பெரியசாமியின் உயிர் உறுப்பினை சிதைத்து, கொன்று புதைத்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த போலீஸார் பெரியசாமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செந்தில்குமாரையும் அவரது நண்பர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags : #HUSBANDANDWIFE #KRISHNAGIRI #ARMY MAN