'பூரிக்கட்டையால் ஓங்கி தலையில் அடித்த கணவர்'.. பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 13, 2019 10:13 AM

மனைவியை பூரிக்கட்டையால் தாக்கிக் கொன்றுவிட்டு, உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்ததாகக் கூறிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

wife dead after husband hits her head by wooden Kitchenware

சென்னை திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த ஏழுமலை- வனிதா தம்பதியருக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மனைவி ராஜேஸ்வரியின் தலையில் பூரிக்கட்டையால் தாக்கியதாகவும், அதன் பின்னர் அருகில் இருந்த மருந்துக் கடையில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கித் தந்ததாகவும் தெரிகிறது.

ஆனால் அதன் பின்னர் தலைவலி, வாந்தி, மயக்கம் என்றிருந்த வனிதா கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தார். பின்னர் மனைவியின் சொந்த ஊரான திருவண்ணாமலை செய்யாறு அருகே உள்ள கோவிலூருக்கு மனைவியின் சடலத்தை ஏழுமலை எடுத்துச் சென்றார். அங்கு வனிதாவின் உறவினர்களிடம் வனிதா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் மகளின் இறப்பில் சந்தேகப்பட்ட , வனிதாவின் தந்தை குப்புசாமி போலீஸில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீஸார் விரைந்துவந்து வனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில்தான் வனிதா பூரிக்கட்டையால் தாக்கப்பட்டதால்தான் உயிரிழந்தார் என்கிற உண்மை தெரியவந்தது. இதனையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு ஏழுமலை கைது செய்யப்பட்டார்.

Tags : #HUSBANDANDWIFE #CHENNAI