‘அன்னைக்கு மட்டும் அவனுக்கு’... ‘சரியான நேரத்தில் கிடைச்சிருந்தா?’... ‘நண்பன் பலியான நாளில்’... ‘உயிர் கொடுக்கும் நண்பர்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 11, 2020 07:28 AM

தோள் கொடுப்பான் தோழன் என்பதுபோல், நண்பன் உயிரிழந்த நாளில் அவரது நினைவாக, நண்பர்கள் சேர்ந்து செய்யும் காரியம் நெகிழ வைத்துள்ளது.

Friends Donates Blood for Friend\'s Death Anniversary

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் என்ற இளைஞர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த போது தேவையான ரத்தம் கிடைக்காததே அவருடைய மரணத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் தேவையான ரத்தம் கிடைக்காமல், ஒன்றாக பழகி கூட இருந்த நண்பனை பறிகொடுத்த சோகத்திலும் நண்பர்கள் ஒன்று கூடி ஆக்கப்பூர்வ முடிவை எடுக்க நினைத்துள்ளனர்.

இந்நிலையில் நிர்மல்குமாரின் முதலாம் ஆண்டு நினைவுத் தினம் வந்துள்ளது. ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த நண்பனின் நினைவாக, அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் ரத்த தானம் செய்ய முடிவு செய்து, அதன்படி, நண்பர்கள் ஒன்று சேர்ந்து ரத்த தானம் செய்தனர். ரத்தம் கிடைக்காமல் இனி எந்த உயிரும் போகக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த முயற்சியை கையில் எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #BLOOD DONATE #FRIENDS #CHENGALPATTU #MADURANTHAGAM