‘அதிவேகத்தில்’ சென்ற கார்... ‘தவறான’ வழியில் வந்த டிராக்டருடன்... ‘நேருக்கு’ நேர் மோதி ‘கோர’ விபத்து... ‘12 பேர்’ பலியான சோகம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகாரில் காரும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள கன்ட்டி என்ற இடம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்கார்பியோ காரும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 14 பேருடன் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த கார் தவறான வழியில் முன்னால் வந்த டிராக்டர் மீது மோதியே விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : #ACCIDENT #BIHAR #CAR #TRACTOR
