‘25 பேருடன்’ சென்றுகொண்டிருந்த ‘பேருந்து’... மலை சாலையில் இருந்து ‘விலகி’... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்த ‘கோரம்’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Mar 09, 2020 06:31 PM

பாகிஸ்தானில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Accident 19 Died As Bus Falls Into Ravine In Northern Pakistan

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து ஸ்கார்டு நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.  கில்கித் என்ற பகுதியின் அருகே போய்க்கொண்டிருந்தபோது மலை சாலையில் இருந்து விலகிய பேருந்து பள்ளத்தாக்கு ஒன்றிற்குள் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை 8 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டடுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Tags : #ACCIDENT #PAKISTAN #BUS