‘ஐயோ பாவம்’!.. ‘இன்னும் கொரோனா வலியே முடியல.. அதுக்குள்ள இப்டியா நடக்கணும்’.. சீனாவில் அடுத்து ஒரு சோகம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 08, 2020 10:50 AM

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

Coronavirus Dozens trapped as China quarantine hotel collapses

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸால், 97 நாடுகளில் 1 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் 3 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள குவான்சோவ் என்ற நகரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த முகாம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த முகாமில் 70-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவால் சீனா துன்பப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து மேலும் ஒரு அடியாக அவர்களுக்கு அமைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #CHINA #CORONAVIRUS #DOZENS