'ஆம்னி' பஸ்ஸை விட காசு கம்மி தான்... 'ஒரேயடியாக' அதல பாதாளத்துக்கு போன 'பிளைட்' டிக்கெட்... எவ்ளோன்னு தெரிஞ்சா 'ஷாக்' கன்பார்ம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பயம் காரணமாக பிளேட்டுகளில் பயணம் செய்ய பலரும் பயப்படுவதால், டிக்கெட் விலை அதல பாதாளத்திற்கு சரிந்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கான கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதாம்.
கொரோனா தாக்கத்தை தவிர்க்க தேவையற்ற பயணத்தைத் தவிா்க்க வேண்டும் என அரசு அறிவுரை வழங்கியுள்ளது. விமான பயணத்தை தவிர்க்குமாறு தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான பயணத்தை நாடுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது.
தற்போது சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல விமான கட்டணம் ரூ.1200 ஆகவும், டெல்லி விமான கட்டணம் ரூ.3000 ஆகவும், மும்பை விமான கட்டணம் ரூ.2000ஆயிரமாகவும் உள்ளது. டெல்லி, மும்பை நகரங்களுக்கான பிளைட் டிக்கெட் ரூபாய் 10 ஆயிரம், ரூபாய் 15 ஆயிரம் என்றிருந்த நிலை மாறி தற்போது ஆம்னி பேருந்து கட்டணத்திற்கு இணையாக பிளைட் டிக்கெட்டின் விலை இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் விமானப்பயணம் செய்ய ஆசையிருந்தால் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.