VIDEO: ‘அசுரவேகத்தில்’ மோதிய கார்.. ‘அந்தரத்தில்’ தூக்கிவீசப்பட்ட மாணவிகள்.. நெஞ்சை உறையவைத்த சிசிடிவி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கார் மோதி பள்ளி மாணவிகள் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆழப்புலா பகுதியில் பள்ளி மாணவிகள் மூன்று பேர் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே சாலையில் தாறுமாறாக வந்த கார் ஒன்று மாணவிகள் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் மூன்று மாணவிகளும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதனை அடுத்து நிற்காமல் சென்ற கார் சிறிது தூரத்தில் சைக்கிளில் வந்துகொண்டிருந்த மற்றொரு பள்ளி மாணவி மீது படுவேகமாக மோதி அருகில் உள்ள மின்கம்பத்தை இடித்து நின்றது. தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த பள்ளி மாணவிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுநர் மது அருந்துவிட்டு கார் ஓட்டியதாக கூறப்படுகிறது. மாணவிகள் மீது கார் மோதுவதற்கு முன்பாக சாலையில் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பள்ளி மாணவிகள், கார் டிரைவர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தாறுமாறாக வந்த கார் பள்ளி மாணவிகள் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
