‘துணி துவைக்க போனாங்க’.. ‘ரொம்ப நேரமாகியும் வீடு திரும்பல’.. செங்கல்பட்டு அருகே தாய், மகளுக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 08, 2020 07:46 AM

செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chengalpattu mother and two daughter drowned in lake

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது பத்து வயது மகள் சுபாஷினி மற்றும் உறவினர் மகள் தேவதர்ஷினியுடன் அருகில் உள்ள ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மூவரும் வீடு திரும்பாததால் அவர்களை தேடி உறவினர்கள் சென்றுள்ளனர்.

அப்போது ஏரியின் கரையில் துணி துவைக்க எடுத்துச் சென்ற பொருட்கள் அனைத்தும் அப்படியே இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் ஏரியில் இறங்கி தேடிப் பார்த்தபோது ஒன்றன்பின் ஒன்றாக மூன்று பேரும் சடலமாக கிடைத்துள்ளனர். உடனே இதுகுறித்து போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த ஒரு வருடத்தற்கு முன்பு ராஜேஸ்வரியின் கணவரும் இதேபோல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாய், மகள் உட்பட 3 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENGALPATTU #DAUGHTER #LAKE #DIES