‘பாலத்தில் இருந்து’... ‘ஆற்றில் வேன் கவிழ்ந்து நடந்த சோகம்’... 'செய்வதறியாது தவித்துப்போன டிரைவர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 10, 2020 08:52 AM

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathyamangalam : Van Overturned into Keezbavani Cullert

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் தனக்கு சொந்தமான வேன் ஒன்றை அருகே உள்ள தனியார் நூற்பாலைக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆலையில் கொண்டு போய் விட்டுள்ளனர். பின்னர் வேன் திரும்பிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக வேனை திருப்ப முடியாமல்  அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் செய்வதறியாது தவித்த வேனில் இருந்தவர்கள் உடனடியாக கரையேறி உயிர் தப்ப முயற்சித்தனர். இதில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் மூலம் வேனை மீட்டனர். இச்சம்பவம் குறித்து பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால், அங்கிருந்த மக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : #ACCIDENT