'ஜன்னல் கம்பியை ஒடச்சிட்டா ஈஸியா உள்ள போயிடலாம்...' 'அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா...?' தலை தெறித்து ஓடிய கொள்ளையர்கள்... !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 21, 2020 02:51 PM

முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் முட்டுக்காடு கிளையில் திருட முயற்சித்த திருடன் பாதுகாப்பு அலாரம் அடிக்கவே அலறியடித்துக் கொண்டு தப்பித்து ஓடிய சம்பவம் சுற்றுவட்டத்தாரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Muthoot fincorp robbery attempt in Kanyakumari

முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் நிறுவனம் தமிழகத்தில் நிறைய பகுதிகளில் தங்களின் கிளைகளை திறந்து மிகவும் பாதுகாப்பாக நடத்தி வருகின்றனர். அதில் ஒரு கிளை கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் முட்டுக்காடு பகுதியில் இயங்கி வருகிறது.

சில பல மாதங்களாக அந்த நிறுவனத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளை நோட்டமிட்டு கொண்டிருந்த சில மர்ம நபர்கள் எங்கெல்லாம் சி.சி.டி.வி. கேமராக்கள் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். அவர்களுக்கேற்ற நல்ல நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த குழு நேற்று இரவு களத்தில் இறங்கியது.

கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்களில் முகமூடியணிந்த ஒருவன், சிசிடிவி கேமராக்களை கம்பு மூலம் வேறு பக்கம் திருப்பி வைத்துள்ளார். அந்த வேலை முடிந்த உடன், கட்டிடத்திற்குள் நுழைவதற்கு சுலபமாக பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கம்பிகளை ஆசா பிளேடால் அறுக்க முயன்றனர். சி.சி.டி.வி. கேமராக்களை நோட்டமிட்ட அவர்கள் அலாரம் பொருத்தப்பட்டிருந்ததை அறியாமல் அலாரம் ஒலித்த சத்தத்தை கேட்டு பதறி அடித்து கொண்டு தப்பி ஓடினர்.

முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் நிறுவனம் அவர்கள் கட்டிடத்தில் மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் பாதுகாப்பு அலாரத்தை தொடர்புப் படுத்தி இருந்ததால் அங்கும் பாதுகாப்பு அலாரம் ஒலித்த உடன் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அக்கட்டிடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் சேமிப்பையும், அருகில் இருக்கும் கட்டிடத்தில் காணப்படும் சி.சி.டி.வி. கேமராக்கள் சேமிப்பையும் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொது மக்களையும், அக்கம் பக்கம் இருக்கும் கடைகளையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #ROBBERY