‘பெரும்பான்மைக்கு தேவை 36 தொகுதிகள்’.. ‘50-ஐ கடந்து ஆம் ஆத்மி கட்சியும், புதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்னிலை!’
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி சட்டப்பேரவை தேர்தலை அடுத்து, 21 மையங்களில் இன்று தொடங்கியுள்ள வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி 70 தொகுதிகளில், 67 தொகுதிகளையும், பாஜக 3 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன. இந்நிலையில் தற்போது பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை என்கிற நிலையில் ஆம் ஆத்மி கட்சி 50 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிற்பகலுக்குள் முடிவுகள் முழுமையாக தெரியலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : #DELHIRESULTS #DELHIELECTIONRESULTS
