'அவர் இல்லாம எப்படி இருப்பேன்?'.. மகளுடன் தாய் எடுத்த சோகமான முடிவு.. உலுக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 04, 2019 06:48 PM
சென்னையில் தனியார் கார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த சரசு என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு வைஷாலி என்கிற பெண் குழந்தை இருந்த நிலையில், அலுவலக பிரச்சனையில் மனமுடைந்த கார்த்திகேயன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, தனது கணவர் இல்லாத வாழ்க்கையை தன்னால் வாழ முடியவில்லை என சரசு அடிக்கடி சொல்லி வந்துள்ளார்.
‘அவர் இல்லாமல் நான் எப்படி இருப்பேம்மா’ என்று தன் தாயிடமும் கூறியிருக்கிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை குழந்தையை தன்னுடன் கட்டிக்கொண்டு வீட்டருகாமையில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து மகளுடன் சரசு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பின்னர் போலீஸார் சடலங்களை வெளியில் எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.